வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 3 மே, 2012

காவல் நீட்டிப்பு....

 பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மீதான நீதிமன்றக்காவலை நீட்டிப்பு செய்து கொடுமுடி நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்ற வழக்கு குறித்த விசாரணை கொடுமுடி குற்றவியல் நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் இரண்டாவது தரப்பு எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

அவரை கைது செய்த போலிசார் கடந்த மாதம் கொடுமுடி குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
அவரை மே மாதம் 3 ம்தேதி வரை நீதி மன்றக்காவலில் வைக்கும்படி கொடுமுடி நீதிமன்ற நடுவர் பாபுலால் உத்தரவிட்டார்.

நீதி மன்றக்காவல் நேற்றுடன் முடிந்த நிலையில் நேற்று மார்ட்டினை கோவை மத்திய சிறையிலிருந்து கொடுமுடி கோர்ட்டில்
 ஆஜர் படுத்துவதற்காக போலிசார் அழைத்து வந்தனர்.

கொடுமுடி நீதி மன்றத்துக்கு வந்த மார்ட்டினை சந்திப்பதற்காக அவரது வழக்கறிஞர் பலரும் வந்திருந்தனர்.
 நீதி மன்றத்தில் மார்ட்டினை போலிசார் ஆஜர் படுத்தி விட்டு வரும் போது நீதி மன்ற வளாகத்தில் சந்தித்து
பேசலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் காத்திருந்தனர்.

இந்த நிலையில் மார்ட்டினை அழைத்து வந்த போலிசார் நீதிபதி முன்பு அவரை ஆஜர் படுத்தி விட்டு மின்னல் வேகத்தில் அழைத்து சென்றனர்.
மார்ட்டின் போலிசாரால் அழைத்து செல்லப்படுவதை அறிந்த அவரது வழக்கறிஞர்கள் அவரை சந்திக்க ஓடோடி வந்தனர்.

மார்ட்டினிடம் பேச முயன்றனர். அதனை அனுமதிக்காத போலிசார் அவரை சந்திக்க விட மறுத்தனர். இதனால் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

மார்ட்டினை சந்திப்பது என்றால் நீதிபதியின் அனுமதியை பெற்றபின்னர் வாருங்கள் அவரை சந்திக்க அனுமதிக்கிறோம்
 என்றனர் போலிசார் இதனால் ஏமாற்றம் அடைந்த வழக்கறிஞர்கள் திரும்பி சென்றனர்.

அதற்குள் தாங்கள் வந்த வேனில் மார்ட்டினை அமர செய்த போலிசார் அவரை அவசகதியில் அழைத்து சென்றனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்