வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 29 டிசம்பர், 2011

அரசு ஊழியர்களாக ஆக்கப்படவேண்டும்

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டப்பயனாளிகள் அனைவரும் அரசு ஊழியர்களாக ஆக்கப்படவேண்டும்
என

கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் நல்லசாமி கூறியுள்ளார். இது குறித்து பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
  
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் பஞ்சகாலத்தில் வேலை இல்லாத நேரங்களில் கிராம மக்களுக்கு வாங்கும் சக்தி உருவாக்கப்படவேண்டும் என்ற நோக்கில் வறட்சி நிலவும் கிராம பகுதிகளில் பஞ்சநிவாரண திட்டம் உருவாக்கப்பட்டது.

காலப்போக்கில் இந்த திட்டம் மகாத்மா காந்தி ஊரகவேலை உறுதி அளிப்பு திட்டம் என பெயர் மாற்றம் கண்டுள்ளது. வறட்சி, பஞ்சம், வாங்கும் சக்தி இவைகளை கண்டுகொள்ளாமல் இந்த திட்டம் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது..

மக்கள் மத்தியில் இது நூறு நாள் வேலை உறுதி அளிப்பு திட்டம் என்று பேசப்படுகிறது.

இந்த திட்டத்தில் பங்குகொள்ளும் தொழிலாளருக்கு ஒரு நாள் கூலி ரூ 120.
இந்த திட்டத்தை ஆண்டு முழுவதும் வேலை பெறும் திட்டமாக மாற்றி அமைக்கப்படவேண்டும்.

பணி நிரந்தரம் அவசியம். கொடுக்கப்படும் கூலி  அரசு ஊழியர் பெறம் சராசரி சம்பளத்திற்கும் குறைவாக இருந்துவிடக்கூடாது.

சம்பளக்கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் கூலி நிர்ணயம் இருக்கவேண்டும்.

அரசு பணியாளர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் இவர்களுக்கும் கொடுக்கப்படவேண்டும்.

அரசிலமைப்புச்சட்டத்தின் 14 வது பிரிவு இதன் மூலம் நடைமுறைக்கு வரும்.
இந்த  திட்டத்தால் பயன்பெறும் பயனாளிகள் வேளாண் பணிகளுக்கு திருப்பபடவேண்டும்.

இவ்வாறு அவர்  அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்