வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 28 டிசம்பர், 2011

ஐயப்பனை வட்டமிடும் கருடன்

                                                   

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே  ஊஞ்சலூரில் உள்ள நாகேஸ்வரர்கோயிலில் ஐயப்ப சுவாமிக்கு ஆராதனை

மற்றும் ஆராட்டு விழா நடந்தது.

ஊஞ்சலூரில் உள்ள நாகேஸ்வரர்கோயிலில்  கடந்த பல வருடங்களாக சுவாமி ஐயப்பா சுவாமியின் விக்ரகம் வைக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகிறது.

ஊஞ்சலூர் ஐயப்பசேவா சங்கத்தினர் மற்றும் ஊர்மக்கள்  சேர்ந்து ஆண்டுதோறும் கேரளாவில் உள்ள சபரிமலையில் ஐயப்பசுவாமிக்கு ஆராட்டு நடைபெறும் அதே நாளில் உற்சவமூர்த்தியை காவிரி ஆற்றுக்கு கொண்டு சென்று பதினெட்டு வகையிலான திரவியங்களைக்கொண்டு அபிஸேகம் நடத்துகின்றனர்.

பின்னர் காவிரியில் ஐயப்பனுக்கு ஆராட்டை நடத்துகின்றனர்.இந்த ஆராட்டு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஐயப்பனை வழிபடுகின்றனர்.

காவிரியில் ஆராட்டு நடைபெறும்போது வானில் கருடன் வந்து ஐயப்பசுவாமியின் விக்ரகத்தை வட்டமிடுகிறது. பின்னர் கோயிலை வட்டமிட்ட பின்னர் மறைந்து விடுகிறது.

கடந்த  46 ஆண்டுகளாக சபரி மலை செல்லும் பக்தர்கள் ஊஞ்சலூரில்  9 ஆண்டுகளாக இந்த ஆராட்டை நடத்தி வருகின்றனர்.

ஆராட்டு நாளில் காலை 5 மணிக்கு மகாகணபதிஹோமம், 8 மணிக்கு காவரியில் ஐயப்பனுக்கு ஆராட்டு, 11 மணிக்கு 108 சங்குகளைக்கொண்டு அபிஸேகம், 12.30 மணிக்கு மகா தீபாரதனை, 1 மணிக்கு பொதுமக்களுக்கு அன்னதானம், 4 மணிக்கு குத்துவிளக்கு பூஜை, 6 மணிக்கு மகா தீபாரதனை, 6.30 மணிக்கு உற்சவர் திருவீதி உலா என பட்டியல்படி நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

இந்த வருடம் நேற்று முன்தினம் டிசம்பர் 27ல் இந்த வைபவங்கள் நடந்தன.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்