வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 29 டிசம்பர், 2011

வாங்கமறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்



 அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்கவேண்டும் என  கொடுமுடி நகர 
பா.ம. க சார்பில் ஈரோடு மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பட்டுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் நகர செயலாளர் பார்த்தீபன், துணை செயலாளர் பிரதாப், இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலெக்டர் சண்முகத்து அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கொடுமுடிக்கு

தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
கொடுமுடியை தமிழக அரசு சுற்றுலா நகராகவும், கோயில் நகராகவும் அறிவித்துள்ளது. இங்குள்ள கட்டணக்கழிப்பிடங்களில் அதிகக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தவிர கோயில் பகுதி, மற்றும் தெருக்களில்  அகற்றப்படாத குப்பைகளில் ,நாய்களும், ஆடுகளும் , பன்றிகளும் மேய்கின்றன. இவற்றால் போக்குவரத்துக்கு இடையூறும், சுற்றுச்சூழல் மாசும் ஏற்பட்டு வருகிறது.

இது குறித்து நடவடிக்கை எடுக்ககோரி கொடுமுடி பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு தந்தோம் மனுவை அவர் வாங்க மறுத்துவிட்டார்.

இது தவிர கொடுமுடி கோயிலில் பக்தர்களுக்கு  கலப்பட நெய், தரமற்ற விளக்குகள், எள்ளுப்பொட்டலம் ஆகியவை விற்க படுகிறது.
இது குறித்து கோயில் செயல் அலுவலரிடம் மனு தந்தபோது அதனை வாங்க மறுத்துவிட்டார்.

இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்