வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 29 டிசம்பர், 2011

மனித கழிவுகள் எங்கே?தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் மனு

வேளாண் விளைபொருட்களின் கழிவுகளின் மனித கழிவுகளும் எங்கே? என்று கேட்டு தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ்
சென்னை நகராட்சி நிர்வாக ஆணையாளருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி மனு அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள மனுவில் கேட்டுள்ளதாவது:

1971 லிருந்து 2011 ஆண்டுவரை 40 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் ஒவ்வொன்றிலும் எவ்வளவு மக்கும் குப்பை ஏலம் விடப்பட்டது? நகராட்சி வருவாயில் அது எவ்வளவு வருவாய் ஈட்டித்தந்தது?

இப்போது ஏலம் விடப்படுகிறதா? விடப்பட்டால் கிடைக்கும் தொகை நகராட்சி வருவாயில் எவ்வளவு சதவிகிதம்? ஏலம் இல்லை என்றால் ஏன் ஏலம் விடப்படவில்லை? என்ன காரணத்தால் ஏலம் விடப்படவில்லை? கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு தொடர்ந்து வந்துகொண்டிருக்கும்

வேளாண் விளைபொருட்களின் எச்சங்கள் மற்றும் மனிதக்கழிவுகள் எங்கே போகின்றன? நகராட்சிகள் அதை எங்கே எதற்கு பயன்படுத்துகிறது?

விளைநிலங்களுக்கு உரமாக செல்கிறதா? அல்லது வீணாக ஆற்றிலும் கடலிலும் வடிக்கப்படுகிறதா?

இவை தொடர்பான முழுமையான, தெளிவான நகராட்சி வாரியான புள்ளிவிபரங்களை தொகுத்து தகவல் உரிமைச்சட்டம் 2005ன் படி அளிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் என கேட்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்