வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 29 அக்டோபர், 2013

குடிநீர் நிறுவனத்துக்கு சீல் புகையிலை பொருட்கள் பறிமுதல் அதிகாரி அதிரடி.

                                                           

 னுமதி பெறாமல் செயல்பட்ட குடிநீர் உற்பத்தி நிறுவனத்திற்கு
சீல் வைத்தும்,தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை  பறிமுதல் செய்தும் அதிரடி ரெய்டு நடத்தினார் ஈரோடு உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்.

ஈரோடு நகரில் உள்ள லஷ்மிநாராயணன் நகரில்  அரசு அனுமதியில்லாமலும், ஐ.எஸ்.ஐ தரச்சான்று பெறாமலும் அருவி என்ற மினரல் வாட்டர் நிறுவனம் செயல்பட்டு வந்தது. சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான இந்த நிறுவனத்துக்கு நேற்று மாலை  வந்த ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நியமன அலுவலர் கருணாநிதி , நிறுவனத்துக்கு சீல் வைத்தார்.

அத்துடன் இந்த நிறுவனத்துக்கு ,அருகே லோகேஷ் என்ற நபருக்கு சொந்தமான  குடோனில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ 10 லட்சம் மதிப்புடைய தடைசெய்யப்பட்ட  பான்பராக், குட்கா, ஹான்ஸ், சாந்தி ஆகிய பெயர்களையுடைய ரூ 10 ல ட்சம் மதிப்புள்ள  புகையிலை  பொருட்களை பறிமுதல் செய்தார்.




கருத்துகள் இல்லை:

பக்கங்கள்