வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 7 செப்டம்பர், 2013

விநாயகர் சிலைகளை கரைக்கவேண்டிய இடங்கள் ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.



 ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுபவர்கள் பூஜைக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை கரைக்கவேண்டிய இடங்களை மாவட்ட நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.  குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைத்து ஒத்துழைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி  ஈரோடு பகுதியில் ஈரோடு  பள்ளிபாளையம் இணைப்பு பாலத்தின் காவிரி ஆற்றுப்பகுதியிலும், திட்டுப்பாறை அருகில் உள்ள கீழ்பவானி கால்வாயிலும், பவானியில் கூடுதுறையிலும், கோபி செட்டிபாளையத்தில் செய்யாம்பாளையம், சந்தியாவனத்துறை பகுதியில் தடப்பள்ளி வாய்காலிலும், சத்தியமங்கலத்தில்  வரசத்தி விநாயகர் கோயில் அருகில் பவானி ஆற்றிலும் கரைக்கலாம் என மாசு கட்டுப்பாட்டு வாரியத்தாலும் மாவட்ட நிர்வாகத்தாலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட இடங்களில் விநாயகர் சிலைகளை கரைத்து விழாவை சிறப்பாக கொண்டாடுவதோடு குறிப்பாக வர்ணம் பூசப்படாத, சுடப்படாத களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை பூஜித்த பின் கரைக்கவும் மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்