வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 31 ஆகஸ்ட், 2013

இந்திய தேசிய எல்லைக்குள் வழங்கப்படும் விருதுகளின் மீது எனக்கு ஆர்வம் இல்லை.

                                          
இந்திய தேசிய எல்லைக்குள் வழங்கப்படும் விருதுகளின் மீது எனக்கு ஆர்வம் இல்லை.


 என்று ஈரோட்டில் நடந்த புத்தக திருவிழாவில்  பங்கேற்ற நடிகர் நாஸர் பேசினார்.

ஈரோட்டில்  கடந்த 3 ம் தேதி புத்தக திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் மாலையில்

 நடைபெறும் கருத்தரங்கில் பல்வேறுபட்ட  தொழில்களில்

ஈடுபட்டுள்ளவர்கள் பேசி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று இரவு நடைபெற்ற கருத்தரங்கில் வாசகர்களில் கேள்விகளுக்கு பதில்

அளிப்பதற்காக நடிகர் நாஸர் அளித்தார். அவர் பேசும் போது

தமிழ்நாட்டில் மிக மிக குறைவாக விருது வாங்கிய நடிகன் நானாகத்தானிருக்கும்,

நான் விருதுக்காக நடித்ததில்லை, இந்திய தேசிய எல்லைக்குள்
வழங்கப்படும் விருதுகளில் எனக்கு ஆர்வம் இல்லை. சிவாஜிக்கு விருது கிடைக்கவில்லை.

ஆஸ்கர் அவார்டுக்கும் இந்திய படங்களுக்கும் சம்பந்தம் இல்லை.

ஆஸ்கார் என்பது ஒரு அளவு கோல் அல்ல. தமிழ் திரைப்ப வரலாற்றின் போக்கை மாற்றி

 அமைத்த படங்களாக பராசக்தி, சந்திரலேகா, உதிரிப்பூக்கள்,
பதினாறுவயதினிலே, சகலாகலா வல்லவன், முரட்டுக்காளை ஆகியவை உள்ளன.

 தீவிரவாதத்தால் அழிக்கப்படும் உயிர்களை விட கண்ணுக்கு தெரியாத  குப்பைகளால்

 ஏற்படும் நோய்களினால் பல உயிர்கள் மனிதர்கள் சாகின்றனர். தயது

செய்து பிளாஸ்டிக்கை எரிக்காதீர்கள், இது கடவுளுக்கு எதிராக செய்யப்படும் காரியம்.

பிஸாஸ்டிக்கை விட மோசமான கண்டுபிடிப்பு இல்லை. இவ்வாறு

அவர் பேசினார். விழாவில் நடிகர் ராஜேஷ், அக்னி ஸ்டீல்ஸ் இயக்குனர் சின்னசாமி,

கிருஷ்ணசாமி, தங்கவேலு, மக்கள் சிந்தனைப்பேரவைத்தலைவர்

ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் பங்கேற்றனர். கொட்டும் மழையிலும்

ஆயிரக்கணக்கான வாசகர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்