வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 7 செப்டம்பர், 2013

ஆடுகளால் ஈரோடு மாவட்டத்தில் 84 கிராம மக்கள் பயனடைந்தனர்.


  முதல்வர் ஜெயலலிதாவின் சிறப்பு திட்டமான விலையில்லா ஆடுகளை  நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்க்கை தரத்தை
உயர்த்திக்கொள்ளவேண்டும் என வருவாய் துறை அமைச்சர் பேசினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில்  விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகம் தலைமை வகித்தார். வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பயனாளிகள் 68 பேருக்கு ரூ8.84 லட்சம் மதிப்பிலான விலையில்லா ஆடுகளை வழங்கிப்பேசினார்.
அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சிறப்பு திட்டமான ஏழ்மையிலும் ஏழ்மையானவர்களுக்கு தலா 4 ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இன்று உங்களுக்கு ஆடுகள் வழங்கப்படுகிறது. ஆடுகளை வளர்ப்பதற்கு உரிய பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடுகளை நல்ல முறையில் பராமரித்து உங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ளவேண்டும்.

ஆடுகளுக்கு ஏதேனும் நோய் அறிகுறி தென்பட்டால் உடனே கால்நடை மருத்துவர்களுக்கு தெரியப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 87 கிராமங்களைச்சேர்ந்த 8 ஆயிரத்து 21 பயனாளிகளுக்கு ரூ10.22 கோடியில் 32 ஆயிரத்து 84 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆடுகள் 30 ஆயிரத்து 254 குட்டிகளை ஈன்றுள்ளன.இந்த ஆண்டில்30 கிராமங்களைச்சேர்ந்த 2 ஆயிரத்து 72 பயனாளிகளுக்கு ரூ2.69 கோடி மதிப்பில் 8 ஆயிரத்து 288 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.  இவ்வாறு அவர் பேசினார்.

 விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் வணங்காமுடி, பெருந்துறை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் தமிழ்ச்செல்வி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்