வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 8 நவம்பர், 2011

குறுகிய தொலைவு அதிக நேரம் ....

                                                       

ஈரோட்டிலிருந்து கொடுமுடி வழியாக தொலை தூரத்துக்கு இயக்கப்படும்  சில அரசு பேருந்துகளில் அதிககட்டணம் வசூலிக்கப்படுவதாக
வும், குறுகிய  தொலைவைக்கடக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வதாகவும், கண்டமான பஸ்களை இயக்கிவருவதாகவும் பயணிகள் புகார் கூறுகின்றனர்.

 ஈரோட்டிலிருந்து கொடுமுடி வழியாக மதுரை, கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், தேனி, கரூர் உள்ளிட்ட நகரங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

 இவற்றில் பெரும்பாலனவை கொடுமுடி வழியாக இயக்கப்பட்டுவருகின்றன. தொலை தூரத்துக்கு இயக்கப்பட்டுவரும் இந்த பஸ்களில் 50 கிமீக்குள் உள்ள ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு இருக்கையில் அமர அனுமதி கிடையாது. எழுதப்படாத சட்டமாக உள்ள இந்தப்போக்கினால் பயணிகள் அவதிக்கும், அவமானத்துக்கு ஆளாகிவருகின்றனர்.

இந்த நிலையில் கும்பகோணம் டிப்போவைச்சேர்ந்த சில பஸ்கள்
போதுமான தகுதியின்றி உள்ளன. இவை பாயிண்ட் டூ பாயிண்ட் என்ற பெயருடன் இயக்கப்பட்டுவருகின்றன. போதுமான என்ஜின் சக்தி இன்றி உள்ள இந்த பஸ்கள் மிக மெதுவாக செல்வதாக பயணிகள் புகார் கூறுகின்றனர்.
குறுகிய தொலைவைக்கடக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் இந்த பஸ்கள் பாயிண்ட்டூ பாயிண்ட் என்ற பெயரில் இயக்கப்பட்டாலும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று இயக்கப்படுவதாகவும் அதனால் குறித்த நேரத்துக்கு செல்லமுடியாமல் அவதிக்குள்ளாக வேண்டியுள்ளது என பயணிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

அதற்கு உதாரண நிகழ்ச்சியாக நடந்த சம்பவத்தை பயணி ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார்.

கும்பகோணம் பஸ் டிப்போவைச்சேர்ந்த ஒரு பஸ்ஸில் இரவு நேரத்தில் நடந்த அந்தக்காட்சியை வீடியோவில் பாருங்கள்… 

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்