வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 10 நவம்பர், 2011

கோமாரிநோய் தடுப்பூசி முகாம்.

ஈரோடு மாவட்டம்  சிவகிரி பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரிநோய் பரவாமல் இருப்பதற்கான தடுப்பூசி மற்றும் சிகிச்சை கள் நடந்தன.

இதில் ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.
மழைக்காலத்தில் கால்நடைகளை கோமாரிநோய் தாக்கும், இதனால் கால்நடைகள் உணவு எடுக்கமுடியாதபடி வாய்ப்புண்ணும் கால்குளம்புகளில் புண்களும் தோன்றும் இதனால் கால்நடைகள் இறப்பை சந்திக்க நேரிடும்.

இதனை தடுக்க ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தடுப்பூசிகளை கால்நடைகளுக்கு  போட்டுவரவேண்டும்.


 காற்று, தண்ணீர் ஆகியவைகளைக்கொண்டு கோமாரிநோய் பரவும், இதனை தடுக்க தடுப்பூசிபோடுவதுடன் கால்நடைகள் கட்டும் கட்டுத்துறைகளை சுத்தமாக வைத்திருப்பதுடன், கால்நடைகள் கட்டுமிடங்களில் சுண்ணாம்பு கரைசலை தெளிக்கவேண்டும்.


நோய் தாக்கிய கால்நடையை மற்ற கால்நடைகளிடமிருந்து தணித்து வைத்திருக்கவேண்டும்.  அவற்றுக்கு கேழ்வரகு கூலை உணவாக கொடுப்பதுடன் , புண்களை வெண்ணீரைக்கொண்டு சுத்தம் செய்யவேண்டும்.


பெரும்பாலும் சந்தைகளிலிருந்து வாங்கிவரும் கால்நடைகளில் கோமாரி நோய்தாக்குதல் இருப்பதற்கான வாய்ப்பு நிறைய உண்டு.


 சிவகிரி பகுதியில் கடந்த ஜீன் மாதம் தடுப்பூசிகள் போடப்பட்டன. இவற்றில் விடுபட்ட  சில கால்நடைகளுக்கு கோமாரி நோய்தாக்குதலுக்குண்டான அறிகுறிகள் தென்பட்டன. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட கால்நடைத்துறை சார்பில் சிவகிரி பகுதிகளில் உள்ள கிராமங்களில் கோமாரிநோய் தடுப்பூசி முகாம்கள் நேற்று நடந்தன.

இதில் ஈரோடு மாவட்ட கால்நடைத்துறையின் மண்டல துணை இயக்குனர் கோபால், <உதவி இயக்குனர் தங்கராஜ், டாக்டர்கள் அருண்குமார், மோகன்ராஜ் உள்ளிட்ட 25 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சைகளும், தடுப்பூசிகளும் போட்டனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்