வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 8 நவம்பர், 2011

விஷ ஜந்துக்களின் வசிப்பிடமான நூலகம்


                                                                  


ஈரோடு மாவட்டம்  கொடுமுடியில் பலரும் பயன்படுத்திவரும் நூலகத்துக்கு
செல்லும் பாதையில் புதர்கள் மண்டியும் கட்டிடஇடிபாடுகளும் குவிந்து விஷ ஜந்துக்களின் வசிப்பிடமாகியுள்ளது.

 கொடுமுடி பேரூராட்சியின் 5வது வார்டில் உள்ளது. பொது நூலகம் பழம்பெரும் திரைப்பட நடிகை கே.பி.எஸ். சுந்தராம்பாள் பங்காளவை ஒட்டியும், விருந்தினர் மாளிகைக்கு எதிரேயும் உள்ள அமைந்துள்ளது பொதுநூலகம், மாணவ மாணவிகளும், பொதுமக்களும் பயன்படுத்திவரும் இந்த நூலகத்துக்கு செல்லும் வழியில் புதர்கள் மண்டிக்கிடக்கிறது.


மேலும் கட்டிட இடிபாடுகளை இந்த பாதையில் குவித்து வைத்துள்ளதால்  இந்தப்பாதை ஒற்றையடி பாதையாகியுள்ளது. புதர்கள் மற்றும் கட்டிட இடிபாடுகளை பயன்படுத்திக்கொண்டு விஷ ஜந்துக்கள் தாராள உலா வருகின்றன.

பொது சுகாதாரத்தைப்பேண நகரை தூய்மையாக வைத்திருப்பதற்கு பல துப்புறவு பணியாளர்களை வைத்துள்ள பேரூராட்சி நிர்வாகம்
தனது அலுவலகத்துக்கு அருகில் உள்ள அறிவைத்தரும் ஆலயமாக உள்ள நூலகத்துக்கு செல்லும் பாதையை கண்டுகொள்ளாமல் வைத்துள்ளது.

கடந்த ஆட்சியின்போது இந்த நூலகத்துக்கு  இணைப்பு சாலை அமைக்க பேரூராட்சியில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தவில்லை.

புது ஆட்சி அமைந்த பிறகாவது பிறந்த மேனியாக உள்ள நூலக பாதைக்கு  கான்கிரீட் ஆடை கிடைக்கும் என்ற  நம்பிக்கையில் மக்கள் இருக்கின்றனர்.
 இந்த நிலையில் ஏற்கனவே இருக்கும் பாதையைக்கூட சுத்தப்படுத்தமால் வைத்துள்ளது அவர்களை சங்கடத்துக்குள்ளாக்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்