வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 9 அக்டோபர், 2013

தமிழ்வளர்ச்சிதுறை வழங்கும் மாநில விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.



 தமிழ்வளர்ச்சி துறை ஆண்டுதோறும் திருவள்ளுவர் விருது, பாரதியார்விருது, பாரதிதாசன் விருது, திரு.வி.க விருது, கபிலர் விருது, உ.வே. சா விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர்விருது, உமறுப்புலவர் விருது, ஜி.யு. போப் விருது என பல விருதுகளைத் தமிழறிஞர்களுக்கு வழங்கி பெருமைப்படுத்தி வருகின்றது.

 தவிர ஆண்டுதோறும் சிறந்த தமிழ் அமைப்பு ஒன்றினைத்தேர்வு செய்து தமிழ்த்தாய் விருதும் வழங்குகின்றது.


 திருவள்ளுவர் விருது திருக்குறள் நெறிபரப்புபவருக்கும், திரு.வி.க விருது சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கும். பாவேந்தர் பாரதிதாசன் விருது சிறந்த கவிஞர் ஒருவருக்கும், பாரதியார் விருது பாரதியார் படைப்புகளை ஆய்வு செய்வோர், பாரதியார் பற்றி திறனாய்வு செய்வோருக்கும், கபிலர் விருது பழந்தமிழர் தொன்மை வரலாறு, நாகரீகம், பண்பாடு, முதலியன புலப்படும் வகையில் மரபுச்öசெய்யுள்,. கவிதைப்படைப்புகளை வழங்கியுள்ளோருக்கும், உ.வே.சா விருது கல்வெட்டுகள், அகழாய்வு ஓலைச்சுவடிகள் , அரிய கையெழுத்துப்படிகள் கிடைத்ததற்கரிய நூல்கள் ஆகியவற்றை வெளிக்கொணரும் வகையில்

பதிப்புப்பணிகளை மேற்கொண்டுவரும் அறிஞர் ஒருவருக்கும், கம்பர் விருது கம்பரைப்பற்றி திறனாய்வு செய்வோர், கம்பர் படைப்புகளை ஆய்வு செய்வோர், கம்பர் புகழ்பரப்பும் வகையில் தமிழ்தொண்டு செய்வோரில் ஒருவருக்கும், சொல்லின் செல்வர் விருது சிறந்த இலக்கிய பேச்சாளர் ஒருவருக்கும், உமறுப்புலவர் விருது தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய அருந்ததொண்டைபோற்றும் வகையில் செயலாற்றிவரும் தமிழறிஞர் ஒருவருக்கும், ஜி.யு போப் விருது தமிழ் இலக்கியங்களை அயல்நாட்டு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் பணியினை மேற்கொண்டு வரும் மொழிபெயர்ப்பாளர் ஒருவருக்கும் வழங்கப்படுகிறது.

 இவ்விருதுகளுக்கு ஒரு லட்ச ரூபாயும், தகுதியுரையும் வழங்கப்படுகின்றன.

தமிழ்த்தாய் விருது தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள், தமிழர்களிஜ் பண்பாடு, நாகரிகம், கலை இலக்கியம் ஆகியவற்றைப்பேணிப்பாதுகாக்கும் வகையில் செயல்படும் சிறந்த தமிழ் அமைப்பு ஒன்றினைத்தேர்வு செய்து விருது வழங்கப்பெறுகிறது.
இவ்விருதுகளுக்கு ஐந்து லட்ச ரூபாயும், தகுதியுரையும், வழங்கப்பெறுகின்றன.

மேலே குறிப்பிட்டுள்ள விருதுகளுக்கு தகுதியுடையோர் ஈரோடு மாவட்ட அளவில் இருந்தால்  அவர்கள் தங்கள்  தன்விவரக்குறிப்பினை அனுப்பி வைக்கலாம் என்று  ஈரோடு மாவட்ட ஆட்சியர் சண்முகம்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்