வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 9 அக்டோபர், 2013

ஈரோடு மாவட்டத்தில் 97 ஆயிரம் நபர்கள்

ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை மற்றும் லிட்டில்  சிஸ்டர் கான்வென்ட் முதியோர் இல்லம் இணைந்து நடத்திய உலக முதியோர் தின விழா திண்டல் முதியோர் இல்லத்தில்
நடந்தது.

 விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகம் கலந்துகொண்டு 90 வயதை கடந்த முதியோர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். அத்துடன் மாறுவேடப்போட்டிகளில் வெற்றி பெற்ற முதியோர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

அவர் பேசியதாவது: மனித வாழ்க்கையின் வாழ்நாளை <உணவு பழக்க வழக்கங்கள் நிர்ணயிக்கிறது. இன்றைய உலகில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த  இரண்டாண்டுகளுக்கு முன்னர் 41 நபர்கள் மட்டும்தான் முதியோர் ஓய்வூதியம் பெற்றுவந்தார்கள்.

தற்போது இம்மாவட்டத்தில் 97 ஆயிரம் நபர்கள் மாதந்தோறும்  ஆயிரம் முதியோர் ஓய்வூதியமாக பெற்றுவருகிறார்கள். தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டுவருகிறது.

இத்திட்டம் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று நடந்த சம்பவங்களை சோகமாய் நினைக்காமல் இதை அனுபவமாய்க்கொண்டு வாழ்க்கையை எதார்த்தமாய் அமைத்துக்கொள்ளவேண்டும். வாழ்க்கையில் நிறைவு என்பது அனைத்து  நிலைகளிலும் ஏற்றுக்கொண்ட மனதளவிலும் நிறைவாக வாழவேண்டும். உணவு, உறக்கம், உடல், உள்ளம் இவைகளை முறையாக கடைபிடித்தால் வாழ்க்கையில் நலமாய் இருக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் உலக முதியோர் தின விழா உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. விழாவில்  முன்னதாக மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா வரவேற்றார். முடிவில் மாவட்ட சமூக நல அலுவலக பாதுகாப்பு அலுவலர் இராமாயி நன்றி தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

பக்கங்கள்