வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 9 அக்டோபர், 2013

ஈரோடு மாவட்டத்தில் துப்புறவு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.



ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் துப்புறவு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக
ஆட்சித்தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளில் 374 பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.

 இந்தப்பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மக்கள் தொகை 3 ஆயிரத்துக்கும் கீழ் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு கூடுதலாக ஒன்று வீதமும்,  3 ஆயிரத்துக்கும்மேல் 10 ஆயிரம் வரை உள்ள கிராம ஊராட்சிக்கு கூடுதலாக இரண்டு இடங்கள் வீதமும், 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராம ஊராட்சிக்கு கூடுதலாக மூன்று வீதமும் துப்புறவு பணியாளர் பணியிடங்கள் கூடுதலாக ஏற்படுத்திட அரசு முடிவு செய்துள்ளது.

இப்பணியிடங்களை நியமனம் செய்வது தொடர்பான அரசாணைகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு வழங்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட :ஊராட்சி மன்ற தலைவரிடம் ஓப்படைக்கவேண்டும். துப்புறவு பணியாளர் நியமனம் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகம் வழங்கப்பட்டுள்ளது.

 இப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 18 முதல் 35 வயதுக்குள் இருக்கவேண்டும்.பணி நியமனம் எந்த ஆண்டில் செய்யப்படுகிறதோ அந்த ஆண்டின் ஜீலை 1 ம்தேதியன்று 18 வயதிற்கு குறைவாகவோ அல்லது 35 வயதிற்கு அதிகமாகவோ இருந்தால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

 மேற்படி வயது வரம்பு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 5 வருடம் தளர்வு செய்யப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர் தமிழில் எழுதப்படிக்க தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 2012--2013 ம் ஆண்டில்  குறைந்த பட்சம் 25 நாட்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணிபுரிந்தவர்கள், ஆதரவற்றோர், விதவைகள், துப்புறவு பணி செய்ய முடிகின்ற உடல் ஊனமுற்றோர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்,

நியமனம் செய்யப்படும் துப்புறவு பணியாளர்களுக்கு மாதம் ரூ2 ஆயிரம் தொகுப்பூதியம் மற்றும் அகவிலைப்பஐ ரூ40 வீதம் அரையாண்டிற்கு வழங்கப்படும்.
பணிநியமனம் செய்யப்படுபவர்  சம்பந்தப்பட்ட ஊராட்சியில் வசிப்பவராக இருக்கவேண்டும். அதே ஊராட்சியில் தகுதியானவர்கள் கிடைக்கவில்லை என்றால் அந்த ஊராட்சியை ஒட்டியுள்ள இதர ஊராட்சிகளில் இருந்து நியமனம் செய்யலாம்.

விண்ணப்பிக்கும் தனியாரின் வீட்டில் தனிநபர் கழிவறை வசதி அவசியம் இருத்தல் வேண்டும். என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்