வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 15 அக்டோபர், 2013

மாயவர் கோயில் விழா

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே நடந்த மாயவர் கோயில்
விழாவில் விடிய விடிய அன்னதானம்.

25 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம்.


ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள
ஓலப்பாளையம் மாயவர் கோயிலில் 25 ஆயிரத்தும் மேற்பட்ட மக்கள்
புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமி தரிசனம்
செய்தனர்.


ஈரோடு மாவட்டத்தில் சிவகிரி அருகே உள்ளது ஓலப்பாளையம்
கிராமம். இந்த கிராமத்தில் மாயவர் கோயில் உள்ளது.


இந்தக்கோயிலில் கடந்த இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக
புரட்டாசி மாத சனிக்கிழமையன்று விழா நடப்பது வழக்கம். இந்த
விழாவில் கலந்துகொள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவது
வழக்கம்.

இப்படி சுவாமி தரிசனத்துக்காக வரும் மக்களுக்கு கோயில் நிர்வாகம்
பழங்கால முறையிலான குழி அடுப்பு செய்து,. அதில்
மண்பானையைக்கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை
தேங்காய் கொட்டாங்குச்சிகளால் செய்யப்பட்ட
அகப்பைகளைக்கொண்டு பரிமாறுவது வழக்கம்


. இப்படி
பறிமாறப்படும் அனைத்து உணவுகளையும் ஆண்கள் மட்டுமே
தயாரிக்கின்றனர்.


இவர்களால் தயாரிக்கப்பட்ட உணவை அனைத்து மக்களும்
உண்பதற்கு போட்டிபோட்டுக்கொண்டு வருவது வழக்கம். வழக்கம்
போல இந்த ஆண்டுக்கான விழா நடந்தது. சுவாமி தரிசனத்துக்காக
வந்தவர்களுக்கு மண்பாணைகொண்டு தயாரிக்கப்பட்ட
உணவுகளை விடிய விடிய வழங்கும் வைபவம்  நடந்தது.

விழாவில் இந்த ஆண்டு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்
கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

பின்னர் துவங்கிய
அன்னதானத்தில் விடிய விடிய பறிமாறப்பட்ட உணவை உண்டு
மகிழ்ந்தனர். விழா ஏற்பாடுகளை மாயவர் அறக்கட்டளை
நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்