வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 1 ஆகஸ்ட், 2012

கருகும் நிலையில்கரும்பு

                                                                     
வறட்சியின் பிடியில் சிக்கி கருகும் நிலையில் உள்ள 3 ஆயிரம் ஏக்கர் கரும்பு பயிரை


அறுவடை செய்யவேண்டி ஈரோடு, திருப்பூர் மாவட்ட புகளூர் சர்க்கரை கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட சங்கத்தினர் புகளூர் சர்க்கரை ஆலை நிர்வாகத்துக்கு தந்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தற்போது தென்மேற்கு பருவமழை தவறியதன் விளைவாக ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் நீர் ஆதரமாக விளங்கும் பவானிசாகர் அணையின்  நீரின் அளவு குறைந்து விட்டதால் எல்.பி.பி பாசனம் மற்றும் காலிங்கராயன் பாசனத்துக்கு நீர் திறப்பு இல்லாமல் போய்விட்டது.

அதோடு பருவமழை அறவே இல்லாமல் அனைத்து பாசனப்பகுதிகளில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீரின் அளவு குறைந்து வற்றி
விட்டது.

கடந்த நவம்பர், டிசம்பர்,ஜனவரி மாதங்களில் பயிரிடப்பட்ட கரும்பு காய்ந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 தற்போது கரும்பு ஆலையில் நடப்பு அறவை பருவத்தில் ஆகஸ்ட் மாத கரும்புகளை அறுவடை செய்து வருகிறது.

தற்போதுள்ள சூழ்நிலையில் நவம்பர், டிசம்பர்,ஜனவரி மாத கரும்புகளை போர்கால அடிப்படையில் சிறப்பு பரிந்துரை செய்து அறவைக்கு எடுத்துக்கொள்ள
அனுமதி அளிக்கவேண்டும்.

அனுமதி கிடைக்கும் பட்சத்தில் விவசாயிகள் தற்போதுள்ள கரும்புக்கு கிடைக்கும் விலை பயிர் கடன் மற்றும் சொட்டுநீர் கடன்களை அடைக்க போதுமான
பணம் கிடைக்குமா? என்ற சூழ்நிலை உள்ளதால் ஆலையின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் விவசாயிகளின் கஷ்டத்தையும் கவனத்தில் கொண்டு
கருகும் கரும்புகளை அறுவடை செய்யவேண்டும். இந்த நிலை சீராகும் வரை தவணைக்கடன்களை வட்டியில்லாமல் நிறுத்தி வைக்கவேண்டும் .

கருகும் கரும்புகளை அறுவடை செய்ய அனுமதி கொடுக்காத பட்சத்தில் பதிவு செய்யப்பட்ட கரும்புகள் காய்ந்து நஷ்டத்தை தருவதை தவிர்க்க வெளியே
வெட்டும் அபாயம் உள்ளது.

என தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட சங்கத்தின் நிர்வாகிகள் சண்முகராஜ், தங்கவேல், கோவிந்தசாமி ஆகியோர் இது குறித்து தெரிவிக்கையில்  புகளூர் கரும்பாலைக்கு
சொந்தமான எட்டுக்கோட்டங்களில்  பயிரிடப்பட்டுள்ள  சுமார் ஆறாயிரம் ஏக்கர் பயிரில் தற்போது 3 ஆயிரம் ஏக்கர் பயிர் கருகும் நிலையில் உள்ளது.

பருவமழை பொய்த்துபோனதால் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்துக்குள்ளாவதை தவிர்க்கவே இந்தக்கோரிக்கையை முன்வைத்துள்ளோம் என்றனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்