வருகை தந்தமைக்கு நன்றி.. !

ஞாயிறு, 29 ஜூலை, 2012

வரப்போகிறது வறட்சி! என்ன செய்யப்போகிறது அரசு?.


ந்திய நாடு தண்ணீருக்காக தென்மேற்கு பருவமழையையும் வடகிழக்கு பருவ மழையையும் நம்பியுள்ள நாடு.


எல்நினோ” பாதிப்பு காரணமாகப் பருவ மழை குறைந்து போகும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

நடப்பு ஆண்டு 2012 ஜீன் மாதம் 1 ம்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். இதற்கு மாறாக காலதாமதமாக துவங்கிய மழை 50 நாட்களுக்கு மேலாகியும்கூட தீவிரம் அடையவில்லை.

அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் கொட்டித்தீர்த்துள்ளது. மற்ற இடங்களில் வெகுவாக பொய்த்துபோயுள்ளது.
மழையளவு 31 சதவிகிதம் குறைந்து போயிருப்பதாக மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார் ஒப்புக்கொண்டுள்ளார்.

 வானிலை ஆராய்ச்சியாளர்களும் 23 சதவிகிதம் குறைந்துள்ளதாக கூறுகின்றனர்.

 மேட்டூர் உள்ளிட்ட நீர்தேக்கங்கங்கள் தமிழகவிவசாயிகளின் பாசனத்துக்காக திறக்கப்படவில்லை.

திறக்கப்பட்ட பவானிசாகர் அணையும் மீன்கள் செத்துமிதக்கும் ஆபத்து வந்துவிடும் என்பதால் கடந்த 16 ம்தேதியிலிருந்து மூடப்பட்டுவிட்டது.
இதனால் பயிர்கள் கருகி காய்ந்து போகும். குறுவை பயிரிட வழியில்லை. மேட்டூர், வைகை, கீழ்பவானி, ஆகிய அணைகள் குடிநீருக்காக மட்டும் திறக்கப்பட்டு வருகின்றன.

தென்மேற்கு பருவமழையின் பிற்பகுதியும், வடகிழக்கு பருவமழையும் கை கொடுக்கவில்லை என்றால் இந்தியா பெரும் நெருக்கடிக்கு  ஆளாகும். உணவு பஞ்ச ம் வந்து விடும்.

கடந்த 25 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் கடும் வறட்சி வந்திருப்பதாகவும், கடும் வெப்பம் மக்களை வாட்டி வதைப்பதாகவும் அந்நாட்டின் வேளாண் துறை அமைச்சர் டாம்வில்சேக் ஒப்புக்கொண்டுள்ளார்.

பருப்பு, சோயா, உற்பத்தியில் உ<லக அளவில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் தற்போது பருப்பு உற்பத்தி 78 சதவிகிதம் சரிந்துள்ளதாக கூறுகிறார்.

அந்நாட்டில் 61 சதவிகித விளைநிலங்கள் வறண்டு காணப்படுவதாகவும் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருப்பதாகவும் இதன் காரணமாக விலை உயர்வு வரவிருப்பதாகவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 38 சதவிகிதம் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.

இதே நிலை பல நாடுகளிலும் காணப்படுகிறது. இந்தியாவின் மக்கள் தொகைக்கான உணவுத்தேவைக்கு இறக்குமதி செய்து பூர்த்தி செய்துவிட முடியாது.

இந்தியநாடு ஒரு விவசாயநாடு. வேளாண் விளைபொருட்களைத் தொடர்ந்து இறக்குமதி செய்துவரும் நாடு. இவ்வாறான தேசிய அவமானத்தை தாங்கிக்கொள்ளும் மக்களைக்கொண்டிருக்கும் தேசம். வேண்டும் அளவுக்கு  உணவு கையிருப்பு உள்ளதாக வேளாண் அமைச்சர் கூறுகிறார்.

இந்த ஆண்டு உலக அளவில் அதிக பருப்பு வகைகளை இறக்குமதி செய்துள்ளது இந்தியா.

மத்திய மாநில அரசுகள் வறட்சியிலிருந்தும் வரவிருக்கிற பஞ்சத்திலிருந்தும் மக்களை காப்பாற்றுமா? இல்லை கைவிடுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ. நல்லசாமி      விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்