வருகை தந்தமைக்கு நன்றி.. !

ஞாயிறு, 27 நவம்பர், 2011

முற்றுப்புள்ளி

ஈரோடு மாவட்டம் கொடுமுடி யூனியன் சேர்மன் தேர்தல் கடந்த மாதம் 29 ம்தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த  யூனியனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க கவுன்சிலர்களில் 4 பேர் அ.தி.மு.க வைச்சேர்ந்தவர்கள். மீதம் 2 பேர் சுயேட்சைகள்.

சேர்மன் வேட்பாளராக கட்சியின் சார்பில் சுப்பிரமணியம் என்பவர் அறிவிக்கப்பட்டார்.  அவரை  சிலர் கடத்தியதாக சுப்பிரமணியத்தின் தந்தை குழந்தைசாமி கொடுமுடி போலிசாரிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரின் தாக்கத்தினால் சேர்மன் தேர்தல் தள்ளிப்போனது. பின்னர் தேர்தல் கமிஷன் மற்றும் சென்னை உயர்நீதி மன்றத்தின் அறிவிப்புப்படி இந்த மாதம் 30 ம்தேதி சேர்மன் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கட்சியால் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை சேர்மன் ஆக்கவேண்டும் என்று கோரிக்கையுடன் அ.தி.மு.க நிர்வாகிகள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

இந்த கையெழுத்துகள் தவறான தகவல் சொல்லி பெறப்பட்டன என குற்றச்சாட்டு மறுபுறம் எழுந்தது.

பெற்ற கையெழுத்துக்கள்  அனைத்தும் யாருடைய சம்மதம் இன்றியும், விருப்பத்துக்கு மாறாகவும் பெறப்படவில்லை. அவை அனைத்தும்  சரியாகப்பெறப்பட்டன.

 மனுவில் கையெழுத்துப்போட்டவர்கள் அனைவரும்  கட்சித்தலைமை முன்பு சாட்சிசொல்ல தயாராக உள்ளனர்.

 மொத்தம் 484 கையெழுத்துகள் மனுவில் உள்ளன. அந்த கையெழுத்துக்களை போட்டவர்கள் கட்சியின் நலன் கருதியும் கட்சி அறிவித்த வேட்பாளரை கொடுமுடி யூனியனுக்கான சேர்மனாக்கவேண்டும்  என ஆதரித்தும் கையெழுத்துக்களை இட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

 கையெழுத்து இயக்கம் நடத்தியவர்கள் கட்சித்தலைமையின் தனிச்செயலரை நேரில் சந்தித்து கையெழுத்துக்கள் அடங்கிய மனுவை அளித்துள்ளனர்.
இது தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு  இந்த பிரச்சனையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவும் இடப்பட்டுள்ளது.

இதன்படி அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சென்னையில் உள்ள கட்சித்தலைமையின் அலுவலகத்தில், இன்று மாலை   அ.தி.மு.க வின் சார்பில்  கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்ட  நான்கு பேரிடம் பேச இருப்பதாக கூறப்படுகிறது.
இன்றுடன் இந்த பிரச்சனைக்கு கட்சி முற்றுப்புள்ளி வைக்கிறது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்