வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 7 அக்டோபர், 2014

கரைபுரண்டது உற்சாகம்: கரைபோட்டது கர்நாடகா உயர்நீதிமன்றம்

         தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  மீதான சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரூ தனி நீதிமன்றம் கடந்த  செப்டம்பர் 27 ம்தேதி நான்கு வருட சிறை தண்டணையும் ரூ100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்ததை  அடுத்து தமிழக முதல்வராக  நீதிமன்றத்துக்கு சென்ற ஜெயலலிதா குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டார்.
       
             இதனை அடுத்து கடந்த பத்துநாட்களாக சிறையில் உள்ள ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கவேண்டும் எனக்கோரி அ.தி.மு.க வழக்கறிஞர்கள் மற்றும் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆகியோர் பெங்களூரு உயர்நீதி மன்றத்தில் வாதிட்டனர்.
          
           உயர்நீதிமன்றத்தில் 73 வது வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில்
வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியின் ஒன்னறை மணி நேர விவாதத்துக்கு பின்னர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
           
           இந்த விவாதங்களை       நீதிபதி      சந்திரசேகரா
 கவனமாக கேட்டுக்கொண்டிருந்தார்.
      
           இதனை அடுத்து அ.தி.மு.க தரப்பில் பிணை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இதன் எதிரொளியாக மீடியாக்களில் ஜெயலலிதாவுக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை என்ற செய்தி ஓடியது.
     
             இதன் தாக்கத்தால் மாநிலம் முழுவதும் அ.தி.மு.க தொண்டர்கள் http://youtu.be/3pbRgXgpUbcபட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
    
              ஈரோடு மாவட்டம் சிவகிரியிலும் அந்த நிகழ்வு தொடர்ந்தது. சிவகிரி பேரூராட்சி தலைவர் பரமு தலைமையில் சிவகிரி பேரூர் அ.தி.மு.க துணை செயலாளர் குமார், பெரியசாமி, சுந்தரம், பூபாலன் உள்ளிட்டோர் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மகளிரணியினருடன் பட்டாசுக்களை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது உற்சாகத்தை பங்கிட்டுக்கொண்டனர்.
    
           இதனை அடுத்து சிவகிரி நகரின் முக்கிய சாலைகள் வழியாக  பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியவாறு  ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலம் தொடங்கிய சற்று நேரத்திலேயே ஜெயலலிதாவுக்கு பிணை கிடைக்கவில்லை என்ற செய்தி தெரியவந்தவுடன் சோர்வுடன் ஊர்வலத்தை நிறுத்திக்கொண்டு திரும்பினர்


கருத்துகள் இல்லை:

பக்கங்கள்