வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

மக்கள் வைத்த கோரிக்கைகளை நூறு சதவிகிதம் நிறைவேற்றி இருக்கிறேன்.


        ரோடு மாவட்டம் சிவகிரி அடுத்துள்ள நம்மகவுண்டன்பாளையத்தில் கட்டப்பட்ட பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கக்கட்டிடத்தை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., ஆர். என் கிட்டுச்சாமி
திறந்துவைத்து பேசினார்.
     
         ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்துள்ள நம்மகவுண்டன்பாளையத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கான புதிய கட்டிடம் ரூ6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

        இதன் திறப்பு விழா நடந்தது. விழாவில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., ஆர்.என். கிட்டுச்சாமி கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.

           இதன் பின்னர் சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட 6வது வார்டில் உள்ள கவுண்டன்பாளையத்தில் புதிய தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. இதில்  எம்.எல்.ஏ., கிட்டுச்சாமி கலந்துகொண்டார்.

      நிகழ்ச்சிகளில் கொடுமுடி யூனியன் சேர்மன் தமிழ்செல்வி, கொடுமுடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் கௌரிசங்கர், மாநில விதைநேர்த்திக்குழு உறுப்பினர் கலைமணி, மாவட்ட கவுன்சிலர் சிவசுப்பிரணி, கொடுமுடி ஒன்றிய  இளைஞரணி செயலாளர் பிரபாகரன், இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் நந்தகுமார், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
       
      நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ., ஆர். என் கிட்டுச்சாமி பேசியதில் சில துளிகள்:

          ஈரோடு மாவட்டத்தில்  ஒரு லட்சம் அரசு ஓய்வூதியம் பெறுவோர் உள்ளனர். மொடக்குறிச்சி தொகுதியில் 11 ஆயிரம்பேர் உள்ளனர். அவர்களுக்கான தொகையை ஜெயலலிதா அரசு  ரூ ஆயிரமாக உயர்த்தி உள்ளது.

        விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டுள்ள ஜெயலலிதா அரசு பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி உள்ளது.

          தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை இந்த அரசு நூறு சதவிகிதம் நிறைவேற்றி வருகிறது.

      நான் வேட்பாளராக இந்த தொகுதியின் ஒவ்வொரு ஊருக்கும் சென்றபோது என்னிடம் மக்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதிதந்தேன்.

        மக்கள் வைத்த அந்த கோரிக்கைகளை குறித்து வைத்துக்கொண்டு தற்போது அவற்றை நூறு சதவிகிதம் நிறைவேற்றி இருக்கிறேன்.

      
 காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



கருத்துகள் இல்லை:

பக்கங்கள்