வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 15 பிப்ரவரி, 2014

சாரி கொஞ்சம் ஓவர்:...ஹி...ஹி... ரவுடி முதல்வர் படித்த மிருகம் போலிஸ் பொதுமக்கள்...



      
                    
          ரோடு மாவட்டம் சிவகிரியில் மாணவர்களை

தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி பெற்றோர்கள் போலிசில் புகார் அளித்தனர்.

          ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர்

காஞ்சி சங்கராச்சாரியர் வந்தபோது அவரது நினைவாக

கொடுமுடியைச்சேர்ந்த பெரியவர்கள் சிலரால் துவக்கப்பட்டது சங்கர வித்யா

சாலா என்ற எஸ்.எஸ்.வி பள்ளி.

         கொடுமுடி மற்றும் சிவகிரியில் செயல்பட்டுவரும் எஸ்.எஸ்.வி பள்ளிகளில் சற்று பெரிய பள்ளி சிவகிரியில் செயல்பட்டுவரும் இந்த எஸ்.எஸ்.வி மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி.

          இந்தபள்ளியில் ஆயிரத்துக்கும்மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர்.

         இந்த பள்ளிகளில் படித்துவரும் மாணவ மாணவிகள் அனைவரும் கிராமப்புறங்களைச்சேர்ந்தவர்களே.

              விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளவர்கள் தங்களது மகன் மற்றும் மகளுக்கு ஆங்கிலத்தை அறிமுகப்படுத்த இந்த பள்ளியில் அட்மிஷன் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

           சிவகிரியில் வேறு எந்த பள்ளியும் ஆங்கில பள்ளியாக இல்லாததால் இந்தப்பள்ளிக்கு மவுசு சற்று கூடுதலாக உண்டு.

           கிராமப்புற குழந்தைகளின் கல்விவளர்ச்சிக்காக நல்ல உள்ளம் கொண்ட சிலரது கொடையால் நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் என வளர்ந்த இந்த பள்ளி கடந்த சில ஆண்டுகளாக சிவகிரி போலிசாருக்கு அடிக்கடி வேலை தருவதை வழக்கமாக்கி கொண்டுள்ளது.

        பள்ளிகளில்  மாணவ மாணவிகளால் தான் சர்ச்சைகள் ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்த பள்ளியின் கதையே வேறாக உள்ளது.

            தமிழக முதல்வருக்கு மிக பிடித்தமான மலைவாசஸ் ஸ்தலமான

நீலகிரியை பூர்விகமாக கொண்ட முருக கடவுள் பெயர் கொண்ட இந்த

பள்ளியின்  முதல்வர்  மீது சக பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகளின்

பெற்றோர் மிகுந்த நேசம்பாராட்டுவதால்!? இந்த நிலை அடிக்கடி வருவது

வழக்கமாகிவிட்டது.

        வருடந்தோறும் இவர் மீது  சிவகிரி காவல்நிலையத்திற்கு புகார்செல்வது வழக்கம். அவற்றை இவர் மறுப்பதும் பின்னர் சமரசம் ஆகிவிடுவதும் வழக்கம்.

          ஆண்டுதோறும்  மார்ச் மாதத்தில் மட்டுமே இந்த சர்ச்சை சற்று ஓவராக இருக்கும் ஆனால் வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு 2014 பிப்ரவரி மாதத்திலேயே சர்ச்சை துவங்கிவிட்டது.

       நேற்று பிப்ரவரி 11 ம்தேதி  9,10,11,12 ஆகிய வகுப்புகளில் படித்துவரும் மாணவர்கள் எப்போதும்போல் காலையில்  பிரேயருக்காக சென்றுள்ளனர்.
பிரேயர் முடிந்த பின்னர் அந்த மாணவர்களிடம் விசாரணை துவங்கியுள்ளது.

          யாருடா சிறுநீர் கழிவறையில்      …தி        என்று இங்கிலீஸ்ல எழுதுனது.. உண்மையை சொல்லுங்க இல்லனா தண்டணைக்குள்ளாவீங்க? என்று முழங்கியிருக்கிறார் பள்ளியின் முதல்வர்.

        இதனை சற்றும் எதிர்பாராத  மாணவர்கள் அப்போதே அரண்டு போயிருக்கின்றனர்.

       என்ன செய்வது பள்ளி முதல்வருக்கு கோபம் வந்தால்  அவர் தரும்  தண்டணை என்னவென்று அந்த நொடி வரை ஆண்டவனுக்கே தெரியாதே..

         இன்று நம் கதி என்னவோ என்ற அச்சம் கலந்த ஏக்கத்தில் மாணவர்கள் மருண்டுபோயிருக்கின்றனர்.

            விசாரணையை நடத்திய ஆசிரியர்கள் அலெக்ஸாண்டர்,  பிரபு ஆகியோரின் அதிகார எல்லை   அப்போதுவரை மாணவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போயிருக்கிறது.

             கேள்வி        நிலை  போய்  தண்டனை அம்பு மாணவர்கள் மீது பாயத்துவங்கியுள்ளது.

          என்னடா நாங்க கேட்டுகிட்டோ இருக்கோம் பதில் சொல்லமாட்டீங்களா? அப்படியே எல்லோரும் முழங்காலை மடித்து முட்டியை போடுங்கடா என்ற உத்தரவு வந்திருக்கிறது.

           உத்தரவுக்கு கட்டுப்பட்ட மாணவர்கள்.. சில மணிநேரம் வரை வெறுந்தரையில் முட்டியை போட்டுக்கொண்டு நின்றுள்ளனர்.

             அப்போதும் உண்மை வெளியே வராததால் புலானய்வு புலிகளாக தங்களைக்கருதிக்கொண்டு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள்  குறிப்பிட்ட  சில மாணவர்களை தங்களது செருப்புகாலில் உதைத்தும், பி.வி.சி பைப்பால் அடித்தும் உள்ளனர்.

இதில் கௌதம் என்ற மாணவருக்கு புறமுதுகில் அடிபட்டு கையை தூக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

            தமிழரசு என்ற மாணவருக்கு காதில் ரத்தம் வந்ததாக சொல்கின்றனர். இதைப்போலவ மாணவர்கள் சந்தீப், சந்தோஷ் என்ற பட்டியல் நீள்கிறது.
வீடு திரும்பிய  மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் முறையிட்டுள்ளனர்.

         இதனால் கோபம் கொண்ட  நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர் நேற்று பள்ளிக்குவந்தனர். பள்ளியின் முதல்வரை முற்றுகையிட்டுள்ளனர்.

     அப்போது   பெற்றோரில் ஒருவர் முதல்வரை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

      இந்த சம்பவம் அரங்கேறிக்கொண்டேறிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த சிவகிரி  போலிசார்  பெற்றோரை சமாதானப்படுத்த முயன்றனர்.

       அது நடக்கவில்லை.     

        இருதரப்பினரும் பேசிக்கொண்டிருந்தபோது சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெற்றோரில் ஒருவரும், வேறுபள்ளியில் ஆசிரியையாக பணியில் உள்ள ஜெயந்தி என்ற பெண்மணி எஸ்.எஸ்.வி பள்ளியின் முதல்வர்  தன்னிடம் தகாத வார்த்தை பேசியதுடன் தவறான முறையில் நடந்துகொள்ள முயற்சித்தாக ஆவேசமாக குற்றம் சாட்டினார்

        இதனால்  கூட்டம் மேலும் உஷ்ணம் அடைந்தது.

                 இந்த சம்பவம் நடந்தபோது பள்ளியின் முக்கிய நிர்வாகிகள் யாரும் பள்ளிக்கு வரவில்லை.

       இதனாலும் பெற்றோர்கள் ஆத்திரமடைந்தனர்.

            இதற்கிடையே இன்ஸ்பெக்டர் சண்முகம் பள்ளியின் கமிட்டி உறுப்பினராக உள்ள  உள்ளூரைச்சேர்ந்த ஒருவரை வரவழைத்து பெற்றோர்களிடம் பேச வைத்தார்.
.
        சம்பவத்துக்கு காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதாக உறுப்பினர் தெரிவித்தார். இதன் பிறகு பெற்றோர் புகார் தந்தால் அதன்மீதுதான் நடவடிக்கை எடுப்பதாக     இன்ஸ்பெக்டர் சண்முகம்   கூறினார்.

         இன்ஸ்பெக்டர் பேச்சை முடிக்கும் நிலையில் பள்ளியின் முதல்வர் தனது வேலையை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனை கைதட்டி வரவேற்ற பெற்றோர் அதனை செய்யும்படி கூறினர்.

இந்த சம்பவத்துக்கு பின்  கூட்டத்தின் வேகம் தணிந்தது.

        இந்த வேகம் தணிந்துகொண்டிருந்தபோது பள்ளியின் நிர்வாகி ஒருவர் சம்பவ இடத்துக்கு வந்தார்.

         அவரை சூழ்ந்துகொண்ட பெற்றோர் பள்ளி முதல்வர் மற்றும் சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியர்கள் மீது புகார் கூறினர்.

அவரிடம் பேசிய காவல்துறை இளநிலை ஆய்வாளர் சண்முகம் ரவுடியைபோல நடந்துகொண்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

       இதனையே பெற்றோர் ஒருவர் படித்த மிருகம் சார் அவர், அவர்மீது நடவடிக்கை எடுங்கள்  என ஆய்வாளர் சண்முகத்திடம் வலியுறுத்தினார்.

ஒருவழியாக ...நீண்ட நேரத்துக்கு பிறகு

சம்பந்தப்பட்ட பெற்றோர் புகாரை எழுதி சிவகிரி போலிசாரிடமும் பள்ளி நிர்வாகத்திடமும் தந்தனர்.

        இந்த சம்பவத்துக்கு பிறகு பள்ளிக்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

       ஆமாங்க  ஒரு சந்தேகங்க.. பதில் தெரிஞ்சா சொல்லுங்க.. மற்ற மாணவர்கள் தண்டணைபெற்றதை அல்லது பெறுவதை பார்த்த பின்னரும்  சம்பவத்துக்கு காரணமான மாணவர்கள் சும்மாவாக இருந்தனர்.

     இந்த சம்பவம் மாணவர்கள் ஒற்றுமையை ஏதோ ஒருவகையில் நமக்கு உணர்த்துகிறதா? அல்லது அவர்கள் செல்லும் பாதையை சொல்லாமல் சொல்கிறதா? உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்...





கருத்துகள் இல்லை:

பக்கங்கள்