வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 15 ஏப்ரல், 2013

கூட்டுறவு வங்கி தேர்தலில் பதற்றம்

                              


 ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கந்தசாமிபாளையத்தில் உள்ளது கந்தசாமிபாளையம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கி.
இந்த வங்கியில்
சுற்றுப்புற ஊர்களைச்சேர்ந்த இரண்டாயிரத்து 700 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.


இந்த வங்கியின் தலைவர் மற்றும் இயக்குனர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 27 ம்தேதி நடக்கிறது.

முன்னதாக இன்று தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து வேட்பு மனுக்களை பெறும் நிகழ்ச்சி நடந்தது.


தேர்தல் அலுவலர் சண்முகசுந்தரம் வேட்பு மனுக்களை பெற்றார். நாற்பதுக்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் பெறப்பட்டன.


வேட்புமனு பெறும் நிகழ்ச்சி துவங்கிய காலை முதல் மாலை வரை பதட்டம் நீடித்தது. இந்த பதட்டத்துக்கு காரணமாக ஆளுங்கட்சியினர் தங்களுக்கு
சாதகமாக எதிர்மனுக்களை தள்ளுபடி செய்ய வைத்து தங்களை பிரதான வேட்பாளர்களாக அறிவித்துவிடச்செய்துகொள்வர் என்ற வதந்தியே இந்த
பரபரப்புக்கு காரணமாக இருந்தது. இது போன்ற நிகழ்வுகள் சில இடங்களில் நடந்திருந்ததால் அந்த கண்ணோட்டத்தில் இந்த நிகழ்வும் பார்க்கப்பட்டது.

இருந்தபோதும் ஆளுங்கட்சியினரை எதிர்த்து இந்த வங்கியின் முன்னாள் தலைவர் நல்லசாமி தலைமையில் புதிய அணி ஒன்று அமைக்கப்பட்டு அந்த அணி
களத்துக்கு வந்தது. இதனால் இரு அணியினரும் சம பலத்தில் உள்ளனர்.

மாலை நெருங்க நெருங்க பரபரப்பு கூடிக்கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் வங்கி அமைந்துள்ள பகுதியில் நின்றுகொண்டிருந்த ஒரு அணியினரை
போலிசார் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் போலிசாருக்கும் அந்த அணியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றி கலவரமாக மூளும் நிலை வந்தபோது பத்திரிக்கையாளர்கள் சுதாரித்துக்கொண்டு தங்களது கேமராக்களைக்கொண்டு நிகழ்வை கவர்
செய்தனர்.

 இதனால் போலிசார் மவுனமாகி திரும்பினர்.

இந்த நிகழ்வுக்கு பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்து தேர்தல் அலுவலர் சண்முகசுந்தரம் தேர்தலில் போட்டியிட தேர்வு பெற்ற வேட்பாளர்களின் பெயர்
பட்டியலை ஒட்டினார்.

இதனை கண்ணுற்ற இரு அணியினரும் தேர்தலில் போட்டி உறுதியானதை எண்ணி களைந்து சென்றனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்