வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 14 மே, 2012

அசத்தும் கலை



என்னதான் அறிவியல் வளர்ச்சி அடைந்துவிட்டாலும் இன்றும் நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புகள் பல

இன்றைய அறிவியலுக்கு புரியாத புதிராகத்தான் உள்ளன.

அந்த வகையில் பிறந்த குழந்தை முதல் ஆடு மாடுகள் வரை
அறிந்தோ அறியாமலோ தங்களது வயிற்றுக்குள்

 வைத்திருக்கும் பல வேண்டாத பொருட்களை வெளியே எடுப்பதில் இன்றைய மருத்துவ உலகுக்கு சவால் விடும்

 வகையில் ஒரே நிமிடத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வெளியே எடுத்து விடுவதில் சாதøனை புரிந்துகொண்டிருக்கிறது நாட்டுப்புறத்தில்
மேற்கொள்ளப்படும் இந்தக்கலை.

குழந்தைகள் முதல் என்ன ஏதென்று அறி யாமல் விழுங்கிவிட்ட சாக்லேட் பேப்பர்கள் ,

பப்பிள் கம். சிறு ஆணிகள்,நாணயங்கள், மற்றும் பெரியவர்கள் சுவைக்காக விரும்பி சாப்பிட்டு ஜீரணம்

ஆகாத எழும்புத்துண்டுகள், வசிய மருந்து எனப்படும் சில கலவைகள் உள்ளிட்ட பலவற்றையும் சிறு குழாய் மற்றும்

காற்றின் துணை கொண்டு நிமிடத்துக்குள்  வெளியே கொண்டு வந்து

ஆச்சர்யப்படுத்திக்கொண்டிருக்கின்றனர் இந்த வைத்தியர்கள்.

கரூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிற்றூரில் உள்ள

 இந்த வைத்தியர்கள் இந்த சேவைக்காக வாங்கும் கட்டணம் இருபது ரூபாய் மட்டுமே.

பல லட்சம் செலவு செய்தும் இன்றைய மருத்துவ விஞ்ஞானத்துக்கு புலப்படாத பல நோய்கள்

இவர்களது இருப்பிடம் தொட்டதும் புலப்பட்டு மறைந்து போவது ஆச்சர்யமாக உள்ளது.


கருத்துகள் இல்லை:

பக்கங்கள்