வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 9 டிசம்பர், 2011

வேட்டையாடும் கும்பல்

கொடுமுடி காவிரி ஆற்றில் வெடிவைத்து கொக்குகளை வேட்டையாடும் கும்பலால்
மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கொடுமுடிக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டிற்காக வந்துசெல்கின்றனர்.

புண்ணிய நதியாக போற்றப்படும் காவிரியில் நீராடி அங்குள்ள மகுடேஸ்வரர் மற்றும் வீரநாரயாணப்பெருமாள், பிரம்மா உள்ளிட்ட மும்மூர்த்திகளை வழிபடுவதுடன்.தங்களை பற்றிய பல்வேறு தோஷங்களை கழிக்கவும், நீத்தார் கடன் நீக்கவும் என பல்வேறு காரணங்களுக்காக வரும் பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் என பல தரப்பும் அச்சப்படும் விதமாக அதிகாலை ஆறு மணி முதல் 8 மணி ஆற்றில்  கொக்குகள் வேட்டையாடப்பட்டுவருகின்றன.

கொடுமுடி  மகுடேஸ்வரர்கோயில் எதிரில் உள்ள காவிரி ஆற்றின் கரையில் நடத்தப்படும் இந்தக்கொக்குவேட்டையானது சற்று வித்தியாசமானது. பாறைகளை பிளக்க பயன்படுத்தப்படும் தோட்டாக்களைக்கொண்டும்  சில சமயம் மீன்களின் காதுகளில் குருணை மருந்தும் வைத்தும் இந்த கொக்குகள் வேட்டையாடப்பட்டுவருகின்றன.

இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சம்பந்தப்பட்ட துறையினர் மக்களின் அச்சம் களைய முன்வருவார்களா?!.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்