வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 9 டிசம்பர், 2011

உலக அறிவை வளர்த்துக்கொள்ள

                                             

சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு
நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் சண்முகம் வந்தார்.

பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆறுமுகத்துடன் உரையாடிய கலெக்டர், பின்னர் மாணவர்களை சந்தித்தார்.

பின்னர் அவர்களிடம்  பேசியதாவது: எனது சொந்த ஊர் நாமக்கல் மாவட்ட ராசிபுரம் அருகே வேலம்பாளையம் என்ற கிராமம். சிறுவயதில் பள்ளிபடிப்பை தொடர தினந்தோறும் 3 கிலோமீட்டர் தொலைவு வரை நடந்து சென்றிருக்கிறேன்.

மிகவும் சாதாரணமான குடும்பத்தைச்சேர்ந்தவன் நான் கல்வி கற்கும் வயதில் கவனத்தை கல்வியில் மட்டும்தான் செலுத்தவேண்டும். உலக அறிவை வளர்த்துக்கொள்ள நூலகங்களுக்கு செல்லுங்கள். நான் எனது கிராமத்தில் இருந்த நூலகத்தில் அப்போதிருந்த 2 ஆயிரத்து 500 புத்தகங்களையும் படித்துள்ளேன்.

இப்போது கூட அந்தப்புத்தகங்களில் படித்த கருத்துக்கள் எனது நினைவில் உள்ளன.

தாய் தந்தையை தெய்வமாக மதியுங்கள். அவர்கள் தான் உங்களது முதல் தெய்வம். நான் எனது பெற்றோரை தெய்வமாக வணங்குகிறேன்.
நமது வாழ்க்கை சிறப்பாக அமைய அவர்களது ஆசிகள் நமக்கு மிகவும் முக்கியம்.

இன்றைய அறிவியல் உலகில் நமக்கான இருப்பை உறுதிசெய்துகொள்ள கல்வியுடன் பொது அறிவு முக்கியம் அவற்றை நீங்கள் வளர்த்துக்கொள்ளுங்கள் இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்