வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 16 அக்டோபர், 2014

அளவு, எடை ,தரம் குறையக்கூடாது : அமைச்சர் எச்சரிக்கை.

                                      
ரோட்டில் ஆட்சித்தலைவரின் கூட்டரங்கில்
விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தி திட்டம் 2015 குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கைத்தறி துறை அமைச்சர் கோகுல இந்திரா தலைமை வகித்தார்.


 தொழில்துறை அமைச்சர் தங்கமணி, சுற்றுசூழல்துறை அமைச்சர் தோப்புவெங்கடாசலம்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தட்சணாமூர்த்தி, கைத்தறி துறை  முதன்மை செயலளர் ஹர்மந்தர்சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


 கைத்தறிதுறை அமைச்சர் கோகுல இந்திரா பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 38 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு 72 லட்சம் சேலைகளும், 76.50 லட்சம் வேட்டிகளும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் 19.66 லட்சம் சேலைகளும், 28 லட்சம் வேட்டிகளும் தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.  இவை 8 ஆயிரத்து 489 தறிகளில் உற்பத்தி செய்யப்பட்டுவருகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 46 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு 43 லட்சம் சேலைகளும்,65.80 லட்சம் வேட்டிகளும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 13.55 லட்சம் சேலைகளும், 18.01 வேட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

விலையில்லா வேட்டி சேலைகள் அரசு நிர்ணயித்துள்ள தரம் , அளவு, எடை ஆகியவற்றுடன் இருக்கவேண்டும். இவற்றை ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. வல்<லுநர்கள் மூலம் தரம் உறுதி செய்யப்படும்.


நெசவாளர் சங்கங்கள்  தங்களுக்கு வழங்கப்பட்ட இலக்குகளை தாமதம் இல்லாமல் உற்பத்தி செய்து முடிக்கவேண்டும்.

நெசவாளர் சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் வேட்டி சேலைகள் தரமும் எடையும் குறையக்கூடாது. வருகிற டிசம்பர் மாதம் 24 ம்தேதிக்குள் அனைத்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும் தங்களுக்குரிய இலக்கினை முழுமையாக எய்திட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்