வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 17 ஜனவரி, 2014

இலங்கை மன்னரின் கடைசி வாரிசு மரணம்.



இலங்கை தீவை ஆட்சி செய்த தமிழ் மன்னரின்
வம்சா வழியில் வந்த கடைசி வாரிசு  இயற்கை எய்தினார்.

ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து  26 ஆண்டுகளாக போரிட்டவர்  இலங்கையை ஆண்ட தமிழ் மன்னர் விக்ரமராஜ சிங்கர்.

 ஏகாதிபத்தியத்தை  எதிர்த்து 26 ஆண்டுகளாக நடந்த போரின் முடிவில் மன்னரும் அவரது குடும்பத்தினரும்   ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டனர்.
சிறைபிடிக்கப்பட்ட இவர்கள் தமிழகத்தில் உள்ள வேலூர் சிறையில் 17 ஆண்டுகள் அடைக்கப்பட்டனர்.

கடந்த 1832 ம் ஆண்டு மன்னர் விக்ரமராஜசிங்கர் இறந்தார்.

இவரின் நினைவாக சென்ற 1990 ம் ஆண்டில் பாலாற்றங்கரையில் அவரை புதைத்த இடத்தில் முத்துமண்டபம் எழுப்பபட்டது.
இந்த மன்னரின் வம்சாவழியினர் வேலூரில் வசித்துவருகின்றனர்.

மன்னர் விக்ரமசிங்கரின் மகன் வயிற்றுபேரனும் மூன்றாவது வாரிசுமான பிரிதிவிராஜ் இன்று  வேலூரில் இயற்கை எய்தினார்.


கருத்துகள் இல்லை:

பக்கங்கள்