வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 24 ஜனவரி, 2014

வங்கதேசத்தை உருவாக்கிய இந்தியாவிற்கு, ஈழத்தை அமைத்து தரும் சக்தி உண்டு.பொன்ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி.

Thiru.Pon.Radhakrishnan



ஈரோட்டில் தமிழக பா.ஜ. கவின் மாநில தலைவர் பொன்ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி தந்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

அரசை ஆள்வதற்கு தகுதியற்றவர் அரவிந்த்கெஜ்ரிவால்,  அவரது சட்டமன்ற உறுப்பினரே அவரை பொய்யன் என சொல்கிறார். இதுதான் ஆம் ஆத்மி கட்சியின் நிலை.

தமிழக மீனவர்களை கைது செய்வதே இலங்கை அரசின் பொழுது போக்காக மாறிவிட்டது.

தமிழக இலங்கை மீனவர்கள் பிரச்சனை குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடியும் என ஆரம்பத்திலேயே அவர்கள் காட்டுகிறார்கள்.

  தமிழக மீனவர்களின் பிரச்சனை மற்றும் ஈழத்தமிழர்களின் நலன் பேணப்பட வேண்டும் என்று சொன்னால் ஒன்று சிங்கள இனவெறி பிடித்த ராஜபக்ச அரசு மாறவேண்டும்.   இல்லை என்றால் இந்தியாவில் கோழைத்தனமான,  ஆள்வதற்கு அருகதையற்ற மன்மோகன்சிங் அரசு அகற்றபட்டு ஆண்மைத்திறன் மிக்க நரேந்திமோடி அரசு வரவேண்டும்.

இலங்கை தமிழர்கள் சந்தோஷமாகவும், இந்திய மீனவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சந்தர்ப்பத்தை நாங்கள் பா.ஜ.க ஏற்படுத்திதருவோம். இலங்கை தமிழர்களை கொன்று குவித்த கொடுஞ்செயலுக்கு தண்டணைதரக்கூடிய காலமாக இந்த தேர்தல் இருக்கும்.

2009 பாராளுமன்ற தேர்தல் நடந்தபோது மெஸ்மரிசம் செய்து தமிழர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது மன்மோகன் சிங் அரசு.

லட்சக்கணக்கான தமிழர்களின் இரத்தத்திலும் சதையிலும் உருவான சேரில் தான் அவர் அமர்ந்தார். கொஞ்சமாவது இன உணர்வு இருக்கும் என்றால் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸை தண்டிப்பதற்கு சபதம் ஏற்று காங்கிரஸ் மற்றும் அந்தகட்சியின் கூட்டணிக்கு ஓட்டுப்போடமாட்டோம் என முடிவு எடுக்கவேண்டும்.

1971ல் வங்கதேசத்தை உருவாக்கி கொடுத்த சரித்திரம் இந்தியாவிற்கு உண்டு.

ஒரு கிழக்கு பாகிஸ்தானை சேர்ந்தவர்களின் உரிமைகள் மீட்டுக்கொடுக்கப்பட  வங்கதேசத்தை உருவாக்குவது சரி என்று சொன்னால்  இலங்கையில் இருக்கும் ஈழத்தமிழர்களின் உரிமை மறுக்கப்பட்டு அவர்கள் அழிக்கப்படும் சூழ்நிலை உருவாகிறது என்று சொன்னால் ஈழம் அமைவதில் எந்த தவறும் கிடையாது என்பது என் கருத்து.

இவ்வாறு அவர் பேசினார்.


கருத்துகள் இல்லை:

பக்கங்கள்