வருகை தந்தமைக்கு நன்றி.. !

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

வளரும் விக்ரகம்...


                                             


சிவகிரி அருகே சுயம்பாய் எழுந்த விக்ரகம் வளர்வதால் பக்தர்கள்  ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.


சிவகிரி அருகே உள்ளது கோட்டைக்காட்டுவலசு. இந்த ஊர் சிவகிரியிலிருந்து தாமரைப்பாளையம் செல்லும் வழியில் உள்ளது. இந்த ஊரைச்சேர்ந்தவர் பெரியசாமிக்கவுண்டர் இவருக்கு சொந்தமான விவசாய நிலம் மேற்காளத்தோட்டம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

பெரியசாமிக்கவுண்டர் தனது நிலத்தை உழது கொண்டிருந்தபோது உழவு கலப்பை கல் ஒன்றில் சிக்கிக்கொண்டு மேற்கொண்டு செல்ல முடியாமல்  ஸ்தம்பித்தது.

இதனால் உழவில் பூட்டியிருந்த எருதுகள் இரண்டும் செய்வதறியாமல் திகைத்து நின்றன.

இதனைக்கவனித்த பெரிசாமிக்கவுண்டர் கலப்பையில் சிக்கியிருந்த கல்லை அகற்றவேண்டி எருதுகளை உழவிலிருந்து கழட்டிவிட்டு கல் சிக்கியிருந்த பகுதியை மண்வெட்டி மற்றும் கடப்பாறைகொண்டு தோண்ட ஆரம்பித்தார்.

தோண்ட தோண்ட கல் தனது அடியைக்காட்டாமல் சென்று கொண்டிருந்தது. ஆறடி ஆழத்துக்குமேல் தோண்டியும் கல்லின் அடிப்பகுதி தெரியவில்லை. இதனால் மலைப்படைந்த பெரிசாமிக்கவுண்டர் தோண்டிய குழியை மூட ஆரம்பித்தார்.

குழியை மூடிக்கொண்டே வரும்போது தான் தெரிந்தது உழவு கலப்பையில் சிக்கிய கல்லின் மேற்பகுதியில்  மத்தியில் சூலாயுதம் ஒன்றும் அதன் இருபகுதியிலும் சூரிய சந்திரர்கள் வடிவங்களும் இருப்பதை இதனை பொருட்படுத்தாத பெரியசாமிக்கவுண்டர் கல்லை முழுவதுமாக மூடினார்.

இருந்தபோதிலும் சில காலம் கழித்து அந்தக்கல் மீண்டும் பூமிக்கு மேலாக வரத்துவங்கியது.

இந்த சம்பவம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது.

கால வெள்ளத்தில் பெரியசாமிக்கவுண்டர் மறைந்தார். இதனை அடுத்து அவரது வாரிசுகள் ராமசாமிக்கவுண்டர்(56) அந்த நிலத்தில் பயிரிடத்துவங்கினார்.

தனது தந்தையின் காலத்தில் தோன்றிய அந்தக்கல் இருந்த பகுதியில் இருந்த வயலை தென்னந்தோப்பாக்கி விட்டு மற்ற இடத்தில் விவசாயத்தை செய்தார்.
ராமசாமிக்கவுண்டருடன் பிறந்த பெண்களான ஜெயமணி, தங்கமணி, கண்ணம்மா ஆகியோருக்கு மணம் முடித்து அவரவர் கணவர் ஊரில் வசிக்க ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் ராமசாமிக்கவுண்டரின் சகோதரிகளில் ஒருவரான தங்கமணி என்பவர் கபிலர்மலையில் கணவர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது அவரது கனவில் “”நான் வன பத்ரகாளியம்மன் உனது மூதாதையர் இடத்தில் சுயம்பாக தோன்றியுள்ளேன் என்னை நீங்கள் வழிபட்டு வரவேண்டும்” என்று அம்மன் அருள்வாக்கு கூறியுள்ளார்.

இதனை அடுத்து தங்கமணி தனது சகோதரர் ராமசாமிக்கவுண்டரிடம் விபரத்தை கூறியுள்ளார். அதனை செவிமடுத்த ராமசாமிக்கவுண்டர் தனது தந்தை பெரியசாமியின் உழவு கலப்பையில் கல் ஒன்று சிக்கியதையும் அதனை அகற்ற முடியாததையும் சொல்லியுள்ளார்.

அம்மன் அங்கு சுயம்பாக தோன்றியுள்ளபோதிலும் அதற்கு நித்திய வழிபாடுகள் செய்ய தனது வாரிசுகள் தயாராக இல்லை என கூறியுள்ளார்.
இப்படி ராமசாமிக்கவுண்டர் கூறிய சில நாட்டகளில் அந்த ஊரில் ராமசாமியின் தோப்பிற்கு அருகில் இருந்த பகவதியம்மன்கோயில்  திருவிழா வந்துள்ளது.

திருவிழாவின் துவக்க நாளில் பூச்சாட்டுக்காக ஊர் எல்லையில் இருக்கும் கிணற்றுக்கு அம்மனுக்கு மந்திர கலச நீர் கொண்டு செல்வதற்காக கோயில் பூசாரி மற்றும் ஊர் மக்கள் திரண்டு வந்துள்ளனர்.

அப்படி வரும்போது வனபத்ரகாளியம்மன் சுயம்பாக தோன்றிய இடத்தை கடக்க முடியவில்லை.

அப்போது கலசம் ஏந்தி வந்த கோயில் பூசாரிக்கு  அருள் வந்துள்ளது. “” நான் வன பத்ரகாளி வந்துள்ளேன் இந்த இடத்தில் சுயம்பாக தோன்றியுள்ளேன் இந்த நிலத்துக்கு சொந்தக்கார வாரிசு எனக்கு வழிபாடு நடத்தினால் உங்களை செல்ல விடுவேன் என அருள்வாக்கு வந்துள்ளது.

இதனை அறிந்த ராமசாமிக்கவுண்டரின் வாரிசுகளில் ஓருவரான சுகுமார் அந்த இடத்துக்கு வந்து சுயம்புக்கு  கற்பூர ஆராத்தி காட்டி வழிபாடு நடத்தியுள்ளார். இதன் பின்னர்மந்திர கலசம் அந்த இடத்தை கடக்க முடிந்துள்ளது.

அன்றிலிருந்து ஓவ்வொரு அமாவாசை தினத்தன்றும் சுயம்பாக தோன்றிய அம்மனுக்கு வழிபாடு நடக்கிறது. இதற்கான பூசைகளை சுகுமாரின் அத்தை தங்கமணியும், சுகுமாரும் செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்