வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 28 ஜனவரி, 2012

போற்றுவோர் போற்றட்டும் ...

                                                            
சிவகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையதத்தில் தமிழ்நாடு பொது சுகாதார துறை
யின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.
விழாவுக்கு  ஈரோடு மாவட்ட கலெக்டர் சண்முகம் தலைமை வகித்தார்.

சிவகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகநாதன் வரவேற்றார்.

 மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., கிட்டுச்சாமி 61 பெண்களுக்கு தலா ரூ12 ஆயிரம் வீதம் ரூ 7 லட்சத்து 32 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினார்.

விழாவில் கலெக்டர் சண்முகம் பேசியதாவது:  ஓவியன் ஒருவன் தெருவில் ஒரு சித்திரத்தை வரைந்தான். வரைந்த சித்திரத்தின் அருகே மக்களின் கருத்தை அறிந்து கொள்வதற்காக இந்த ஓவியத்தில் குறை இருப்பின் குறித்து செல்க என்று ஒரு சிறு குறிப்பை எழுதி வைத்தான்.

மறுநாள் வந்து பார்த்தபோது நிறைய மை தீர்ந்திருந்தது. அந்த அளவிற்கு  குறிப்புக்கள் இருந்தன. அதைக்கவனித்த அந்த ஓவியன் அந்த ஓவியத்தின் அருகே நிறை இருப்பின் குறித்து செல்க என்று எழுதி வைத்தான்.

மறுநாள் வந்து பார்த்தபோது மை தீர்ந்திருந்தது. அந்த அளவிற்கு குறிப்புகள் இருந்தன.

இதை எதற்காக சொல்கிறேன் என்றால் ஒரு பணியில் ஈடுபடும்போது  பல கருத்துகள் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும்  என்று நம் கடமையை சரிவரச்செய்வதில் நம் கவனம் இருக்கவேண்டும்.

சென்ற டிசம்பர் மாதம் ஈரோடு மாவட்டத்துக்கு 7 கோடியே 30 லட்சத்தை தமிழக அரசு நலப்பணிக்கு தந்தது.

தற்போது இந்த ஜனவரி மாதம் 28ந்தேதிக்குள்  1 கோடியே 82 ஆயிரத்து 84 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

உரிய நேரத்தில் உரிய முறையில் நம் கடமையை உரிய முறையில் செய்தால் வையத்துள் வாழ்வாங்கு வாழலாம் இவ்வாறு  அவர் பேசினார்.
முடிவில் டாக்டர் சந்திரகலா நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்