வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 28 ஜனவரி, 2012

ஆழ்ந்த தியானம்போல்...

                                                                  
 சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் மாணவர்களுக்கு
தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும்  விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

விழாவுக்கு பள்ளித்தலைமை ஈரோடு மாவட்ட கலெக்டர் சண்முகம் தலைமை வகித்தார். பள்ளித்தலைமை ஆசிரியர் ஆறுமுகம் வரவேற்றார். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. கிட்டுச்சாமி134 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

முன்னதாக அவர் பேசியதாவது:   தமிழக முதல்வர் ஜெயலலிதா மாணவர்களுக்கு இலவச காலனியுடன் இலவச சைக்கிள்கள் இலவச ஜாமெட்ரிபாக்ஸ், பள்ளி புத்தக பை, 11  மற்றும் 12 ம் மாணவர்களுக்கு  உதவித்தொகை, மடிக்கணினி, என பல உதவித்திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

ஒரு காலத்தில் தனியார் பள்ளி மாணவர்களை பார்த்து ஏங்கிய நீங்கள் இன்று அவர்களை விட ஒரு  மேலான நிலையில் உள்ளீர்கள். இனிமேல் தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள் உங்களை பார்த்து ஏங்கும் நிலை வந்துள்ளது.

உங்களிடம் அரசு எதிர்பார்ப்பது 100 சததேர்ச்சியை. இந்தப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வரவேண்டும். நமது கலெக்டர் விருதுநகரில் பணி ஆற்றியபோது அந்த மாவட்டம் பள்ளிக்கல்வியில் முதல் இடத்தைப்பெற்றது. தற்போது அவர் ஈரோட்டிற்கு வந்துள்ளார்.

ஈரோடு மாவட்டமும் முதல் இடத்தை பெறும். மாணவர்கள் ஒழுக்கத்துடன் திறமைகளை மேம்படுத்திக்கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கலெக்டர் சண்முகம் பேசியதாவது: சாக்ரட்டீஸ்  அவர்களின் மாணவர் பிளேட்டோ அவரது மாணவர் அரிஸ்டாட்டில் அவரது மாணவர் மகா அலெக்சாந்தர்.

ஒரு முறை சாக்ரட்டீசிடம் அவரது மாணவர் ஒருவர் பேசியபோது சாக்ரட்டீஸ் அந்த மாணவரிடம் நீ சொல்வது உண்மையா? எதிர்காலத்துக்கு நன்மை தரக்கூடியதா? அதனால் உனக்கோ சமூகத்துக்கோ பயன்தருமா?  இவைகளை தராது எனில் அதை பேசாதேவிட்டுவிடு  என்றார்.

ஒரு மருத்துவ கல்லூரியில்  நடந்த உண்மையான நிகழ்வு இது மாணவர்கள் பிரேதங்கள் குறித்து அறிந்துகொள்ளும்போது தயக்கம் காட்டி தங்களது அறிவை வளர்த்துக்கொள்வதில் பின்தங்கிவிடக்கூடாது என்று  பேராசிரியர் ஒருவர் எண்ணினார்.

ஒரு நாள் இறந்துபோன நாய் ஒன்றின் வாயில் தன் விரலை வைத்து அதனை தன் வாயில் வைத்துக்காட்டினார்.

அதனைப்பார்த்த மாணவர்கள் தயக்கம் நீங்கி தாங்களும் இறந்துபோன நாயின் வாயில் விரலை வைத்தபின்னர் தங்களது வாயில் விரலை வைத்தனர்.
இதனைக்கவனித்த பேராசிரியர் தான் நடந்துகொண்ட முறை குறித்து சொன்னார். மாணவர்களே நான் செய்த செயலை நீங்கள் மேம்போக்காக கவனித்தது உங்களது செயலில் இருந்து தெரிகிறது.

நான் நாயின் வாயில் எனது நடுவிரலை வைத்தேன் பின்பு எனது வாயில் சுட்டுவிரலை வைத்தேன் கவனித்தீர்களா என்றார்? இந்த சம்பவம்  நமது கவனிப்பு திறன் குறித்த அக்கறையை சுட்டிக்காட்டுவதாக உள்ளது.

 நொடிதோறும்  நடைபெறும் நிகழ்வுகளில் நாம் விழிப்புடன் கவனத்துடன் இருக்கவேண்டும்.
மாணவர்களின் மனம் நிலம் போன்றது. அது பாழ் நிலங்களாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அந்த நிலத்தில் பார்த்தீனியம் வளராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

நேர்மையான கடும் முயற்சியை கொண்டால் நல்ல வெற்றியை அடையலாம்.

 மகாத்மா காந்திக்கு ஒரு முறை ஹிரண்யா அறுவை சிகிச்சை செய்தபோது  அவருக்கு எந்த மயக்க மருந்தும் தரப்படவில்லை. அறுவை சிகிச்சை நடந்தபோது அவர் பகவத்கீதையை படித்துகொண்டிருந்தார். ஆழ்ந்த தியானம்போல் படிப்பு இருந்தது..இருக்கவேண்டும்.

பேரறிஞர் அண்ணாவுக்கு டாக்டர் மில்லர் அறுவை சிகிச்சை செய்யவந்தபோது அண்ணா அவர்கள் ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அறுவை சிகிச்சை க்காக வந்த டாக்டர் மில்லரிடம் ஒரு மணி நேரம் பொருத்து எனக்கு அறுவை சிகிச்சை செய்யுங்கள் தற்போது நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தை படித்து முடித்து விடுகிறேன் என்றார்.

வாழ்க்கையில்  கடும் முயற்சி, பயிற்சி, பழக்கம், இலக்கு இவற்றை நிர்ணயித்துக்கொண்டு உழைப்பவர்கள் மாபெரும் வெற்றியை அடைவார்கள் என்றார்.
பின்னர் பள்ளி விளையாட்டு திடல் அருகே மரக்கன்றுகளை நட்டார்.


கருத்துகள் இல்லை:

பக்கங்கள்