வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 7 ஜனவரி, 2012

அம்மாவுக்கு செருப்படி,ஆங்கில நாளிதழ்கள்எரிப்பு



   நக்கீரன் வார இதழில் வந்த செய்தியைக்கண்டித்து இன்று ஜனவரி 2012  ஏழாம் தேதி தமிழகத்தில் உள்ள ரத்தத்தின் ரத்தங்கள் பொங்கி
எழுந்து அந்த இதழை எரிக்கும் செயல்களை மிக தீவிரமாக மேற்கொண்டனர்.

 எழுந்த   தீவிரத்தில் சில இடங்களில் அம்மாவுக்கு செருப்படிகளை தந்ததுடன், எந்த இதழில்  செய்தி வந்ததோ அந்த இதழுடன் சில ஆங்கில நாளிதழ்களையும் தீ வைத்து எரிக்கப்பட்ட
சம்பவங்களும் அரங்கேற்றின.

 மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி மற்றும் திராவிடர் கழக தலைவர் வீரமணி ஆகியோரின் பிரச்சாரங்களை தமிழகம் முழுவதும் சென்று எதிர்கொண்டு முறியடிக்க ஜெயலலிதா தான் சரியான ஆள் என அப்போதைய தனது அமைச்சரவை சகாக்களிடம் சொல்கிறார்.
அதற்கு அமைச்சர் பொன்னையன்  திராவிட இயக்கங்கற அடையாளத்தோட இருக்கிற நம் கட்சியோட கொள்கையை பரப்ப ஒரு பிராமினை நியமிப்பது சரியாக இருக்காதுன்னு சொல்கிறார்.

அதற்கு ஜெயலலிதாவை நீங்க சரியாக புரிஞ்சிக்கலை. எதையும்  பட்டுனு நேரில் பேசிடுவார் அவர். எனக்கு பீப் சமைச்சு கொடுத்திருக்கு. பழக்கமில்லாததால் அதை நான் சாப்பிடலை. மாட்டுக்கறி சாப்பிடுற ஜெயலலிதாவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்க என்று எம்.ஜி.ஆர் எதிர்கேள்வி கேட்கிறார்.

இந்த ரீதியில் அந்த  இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்துதான் தமிழகம் முழுவதும் ரத்தத்தின் ரத்தங்கள் பொங்கி எழுந்து அந்த இதழை தீ யிலிட்டு கொழுத்தினர்.

ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி ஆகிய இடங்களில் நக்கீரன் இதழை தீ யிட்டு எரிக்கும் சம்பம் நடந்தது.
சிவகிரி கடைவீதியில் அமைந்துள்ள தீரன் சின்னமலை சிலை அருகே நடந்த தீ எரிப்பு சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி , மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி நிர்வாகிகள், மற்றும் சிவகிரி நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அப்போது நக்கீரன் நாளிதழின் முகப்பில் உள்ள ஜெயலலிதா படத்துடன் தீ யிட்டு எரித்தனர்.


எரிந்துகொண்டு இருக்கும்போதே அந்த இதழை செருப்பில் அடித்தனர். அந்த அடிகள் அனைத்துமே  முன்பக்க அட்டைப்படத்தில் இருந்த ஜெயலலிதாவுக்கு விழுந்தது.

இதே போல மொடக்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் நடந்த தீ எரிப்பு சம்பவத்தில் நக்கீரன் நாளிதழுடன்,  ஆங்கில பத்திரிக்கைகளான இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றையும் சேர்த்து எரித்தனர்.

இதற்கான காரணம் கடைசி வரை புரியவில்லை.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்